சித்திரைத் திருவிழா - மதுரை மாவட்டத்திற்கு மே 12 உள்ளூர் விடுமுறை

எழுத்தின் அளவு: அ+ அ-


சித்திரை திருவிழாவுக்காக மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மதுரையில் வரும் 28ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழாக்கள் நடைபெறுகிறது. குறிப்பாக மே 12ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. விழாவில் லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், அன்றைய தினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக பின்னர் வரக்கூடிய ஒருநாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Night
Day