சின்னம்மா தலைமையில் அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டி தக்கலை தர்காவில் மும்மதத்தினர் வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரிந்து கிடக்‍கும் அஇஅதிமுக ஒன்றிணையவும், கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஒன்றுபட்டு செயல்படவும் வேண்டி, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையிலுள்ள மெய்ஞ்ஞான மாமேதை ஷெய்கு பீர்முஹம்மது ஸாகிபு ஒலியுல்லா தர்ஹாவில், திருவிளக்கேற்றி பிரார்த்தனை நடைபெற்றது.

அஇஅதிமுக பிளவுபட்டு உள்ளதால், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான தொண்டர்கள், கழகத்தை தொடர் தோல்விலியிருந்து காப்பாற்றவும், கழகத்தை தலைமையேற்று வழிநடத்தவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு அழைப்பு விடுத்து தமிழகம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். 

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள  மாமேதை ஷெய்கு பீர்முகம்மது ஸாகிபு ஒலியுல்லா தர்காவில்  மும்மத மக்களும் கலந்து கொண்ட சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கறிஞர் கிரைஸ்ட் மில்லர் தலைமையில் திருவிளக்கேற்றி நடைபெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டு, அஇஅதிமுக-வுக்‍கு சின்னம்மா தலைமையேற்க வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.

Night
Day