சேலம் கோட்டை அழகிரிநாதர் சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் வைகாசி திருவிழா கொடியேற்றம், , கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேக ஆராதனை உள்ளிட்டவை வெகு சிறப்பாக நடைபெற்றன.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு கோட்டை அழகிரிநாதர் சுவாமி திருக்கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழங்க, கொடியேற்றப்பட்டது.

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேளதாளங்கள் முழங்கிட பூஜிக்கப்பட்ட கொடி பல்லக்கில் கொண்டு வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனா.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள கோசலை கிராமம் அருகே உள்ள அட்சய சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அட்சய சாய் பாபாவை பல்லக்கில் வைத்து பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

தருமபுரி மாவட்டம் கோவிலூர் கிராமத்தில் மலை மீது உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அடிவாரத்தில் உள்ள குந்தியம்மன் கோயிலில் இருந்து வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் தீர்த்தகுடம், பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.



Night
Day