ஜன 17-20 ஆம் தேதி வரை ஈஷா யோக மையதின் பண்ணிசை நிகழ்ச்சி 15 கோயில்களில் நடைபெறும்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் முழுவதும் ஈஷா யோகா மையத்தின் சார்பாக தென் கைலாய பக்தி பேரவை நடத்திவரும் சத்குரு குருகுலத்தில் பயிலும் சமஸ்கிருதி மாணவர்கள் தமிழில் புகழ்பெற்ற தேவார பாடல் பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி பள்ளியில் பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் மொத்தம் 4 குழுக்களாக பிரிந்து சென்று இந்த தேவார பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இன்று முதல் ஜனவரி 20ம் தேதிவரை 4 நாட்களில் 15 பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார். இதன் முதல் நிகழ்ச்சி பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் முன்னிலையில் துவங்கப்பட உள்ளது. 

varient
Night
Day