தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னை திருவிக நகரில் பிஸ்கட் பாக்கெட்டுகளால் விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி, மதுரை மதிச்சியம் பகுதியில், ஆயிரம் வில்வம் பழங்களை கொண்டு 5 அடி விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.இதனைக் காண திரளான பக்தர்கள் குவிந்தனர். 

சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கொழுக்கட்டை, பலகாரங்கள், பழங்கள் படைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி, அதிகாலை முதலே கோயிலில் குவிந்த பக்தர்கள் விநாயக பெருமானை மனமுருகி வழிபட்டனர். 

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள உலக புகழ்பெற்ற கற்பக விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் குவிந்த திரளான பக்தர்கள், அலங்கரிக்கப்பட்ட விநாயக பெருமானை வழிபட்டனர்.

கோவை மாவட்டம், புலியகுளம் முந்திவிநாயகர் கோயிலில் உள்ள 19 அடி உயர விநாயகருக்கு 2 டன் மலர்களால் சந்தன காப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, விநாயகருக்கு பிடித்தமான பலகாரங்கள், கொழுக்கட்டை உள்ளிட்டவைகளை படைத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து, 

புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் ஆலயத்தில் மூலவருக்கு தங்கக்கவசம் மற்றும் பட்டு அணிவிக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதிகாலை முதலே கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 


Night
Day