திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. கடற்கரையில் சூரபத்மனை ஜெயந்திநாதர் வதம் செய்ததை பக்தி கோஷம் விண்ணை பிளக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். 
  
முருகன் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 2 ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது. கடற்கரையோரம் அலைகடலென திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர், முதலில் யானை முகம் கொண்ட தாரகா சூரனையும், இரண்டாவதாக சிங்கமுகம் கொண்ட சூரபத்மனை வேலால் வதம் செய்தார். 

Night
Day