திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.05 கோடி வசூல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருத்தணி முருகன் கோவிலில் 22 நாட்களில் உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக விளங்கும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது. அதில், ஒரு கோடியே 5 லட்சத்து 54 ஆயிரத்து 987 ரூபாய் ரொக்கம் மற்றும் 382 கிராம் தங்கம், 5 ஆயிரத்து 280 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day