திருப்பதி தேவஸ்தானத்தில் ஊழல் : லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த ஆட்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்தில் சிருங்கேரி சாரதா பீடம் மட கட்டுமான பணிகளில் முறைகேடு, தரிசன டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில், திருப்பதி திருமலையில் உள்ள பல்வேறு துறைகளில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனிடையே நிபந்தனையை மீறி கட்டப்பட்டுள்ள மடத்தை இடிக்க வலியுறுத்தி, மடாதிபதிகள் சிலர் திருப்பதி மலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

varient
Night
Day