திருப்பதி லட்டுக்கு தரமற்ற நெய் - ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதிக்கு கலப்பட நெய் அனுப்பிய விவகாரத்தில், திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி புட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும், லட்டு பிரசாதங்களுக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது. அந்தக் கலப்பட நெய்யை விதிமுறைகளுக்கு மாறாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு தமிழகத்தில் உள்ள ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் சப்ளை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கலப்பட நெய் வினியோகம் செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேவஸ்தானம் சார்பில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில், பேரில் போலீசார் ஏ.ஆர். டெய்ரி புட் நிறுவனம் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Night
Day