திருப்பதி - ஆன்லைன் டிக்கெட் விநியோகம் டிச.23-ல் தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் பிரவேசம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் விநியோகம் வரும் 23,24 ஆகிய தேதிகளில் துவங்க உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஜனவரி மாதம் பத்தாம் தேதி துவங்கி 19ஆம் தேதி வரை 10 நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். அந்த நாட்களில் சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய ஸ்ரீவானி அறக்கட்டளை டிக்கெட்டுகள் இம்மாதம் 23ஆம் தேதியும், 300 ரூபாய் டிக்கெட்டுகள் 24ஆம் தேதி காலை 11 மணி முதல் ஆன்லைனில் விநியோகம் செய்யப்படும் என  தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதேபோல் அடுத்த மாதம் 10 முதல் 19ம் தேதி வரை இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்ய திருப்பதி மலையில் ஒரு இடத்திலும், மேலும் திருப்பதியில் எட்டு இடங்களில் கவுண்டர்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day