திருப்பரங்குன்றம் கோவிலில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தரிசனம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் கோவிலில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்தார். 


ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், பழநி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார். திருக்கோயில் சார்பாக, ரமேஷ் பட்டர் மாலையணிவித்து ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு-க்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. மேலும், கந்த குரு வேத பாடசாலையில் வேதங்கள் முழங்க ஆசீர்வாதம் செய்யப்பட்டது.

Night
Day