திருவண்ணாமலை மலை மீது அத்துமீறி ஏறிய பெண் பத்திரமாக மீட்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

 திருவண்ணாமலை தீபமலை மீது அத்துமீறி ஏறி, 2 நாட்களாக தவித்த பெண்ணை வனக்காப்பாளர் பத்திரமாக மீட்டார்.

திருவண்ணாமலையில் பெய்த மழை காரணமாக, அருணாச்சலேஸ்வரர் கோயில் மலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் கார்த்திகை தீபத்தின்போது மலைஏற அரசு அனுமதி மறுத்தது. தொடர்ந்து கடந்த 13-ஆம் தேதி, தீபம் ஏற்ற நெய் எடுத்து செல்வோர், தீபம் ஏற்றுவோர் மற்றும் செய்தியாளர்கள் என அடையாள அட்டை வைத்திருப்போருக்கு மட்டும் மலையேற அனுமதி வழங்கி மலை மீது தீபம் ஏற்றப்பட்டது. இதனிடையே அத்துமீறி தீபமலை மீது ஏறி 2 நாட்களாக கீழே இறங்க வழி தெரியாமல் தவித்த ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த அன்னபூர்ணா என்ற பெண்ணை வனக்காப்பாளர் மீட்டு முதுகில் சுமந்து வந்து கீழே இறக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day