தீட்சிதர்கள் கடவுள் கிடையாது - நீதிமன்றம் கண்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் தாங்கள் கடவுளை விட மேலானவர்கள் என நினைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய உதவிய  நடராஜ தீட்சிதரின் பணியிடை நீக்கத்தை அறநிலையத்துறை இணை  ஆணையர், ரத்து செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து பொது தீட்சிதர்கள் தொடர்ந்த  வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி,  தீட்சிதர்களால் தனக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும்,  பக்தர்கள் அவமானப்படுத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார். தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவதாகவும். தங்களை கடவுளுக்கு மேலானவர்கள் என கருதுவதாக சுட்டிகாட்டிய நீதிபதி, இப்படியே இருந்தால் பக்தர்களுடைய வருகை குறைந்து கோயில் பாழாகி விடும் குறிப்பிட்டு, விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.


Night
Day