தேவர் குருபூஜை – யாகசாலை பூஜையுடன் தொடக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் நடைபெற்ற ஆன்மீக விழாவில் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் புராண பாடல்கள் பாடி குருபூஜை விழா தொடங்கியது. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு புனிதநீர் ஊற்றபட்டு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அகமுடையார் நலச் சங்கம் சார்பில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 223வது குருபூஜை விழா ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக நாட்டான்மை கொட்டாய், வண்டிக்காரன் கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க வட்டாரவளர்ச்சி அலுவலகம் எதிரே இருந்து ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பு வரை ஊர்வலமாக சென்று மாமன்னர் மருதுபாண்டியர்களின், திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.


Night
Day