நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா, ஆண்டுதோறும் கிருஷ்ண அஷ்டமி என சொல்லக்கூடிய ஆவணி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று நாடு முழுவதும் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, வடமாநிலங்களில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கோயிலில் பெண் பக்தர்கள் உற்சாகத்துடன் ஆடிப்பாடி கொண்டாடினர்.

டெல்லியில் பிர்லா கோயில் என்று அழைக்கப்படும் லட்சுமி நாராயண் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு தீபாரதணை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், டெல்லியில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ணரை வண்ண மலர்களால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தர்கள் பாடல்களை பாடியபடி தரிசனம் செய்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஸ்வர் கோயிலில் கிருஷ்ணருக்கு பக்தி கோஷம் முழங்க சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னாவில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கலாசாரத் துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் பங்கேற்றார். பின்னர், மோகன் யாதவ் உள்ளிட்ட பலர் கிருஷ்ணரை குறித்த பாடல்களை பாடி விழாவை கொண்டாடினர்.


Night
Day