நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலக் கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வடமாநிலங்களில் உள்ள விநாயகர் கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா, ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்று நாடு முழுவதும் பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜா விநாயகர் கோயிலில் காலை முதலே பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். 

varient
Night
Day