பத்மநாபசுவாமி கோயில் ஆராட்டு விழா - 5 மணிநேரம் விமான போக்குவரத்து நிறுத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் ஆராட்டு விழா ஊர்வலம் இன்று நடைபெறுவதை ஒட்டி, 5 மணிநேரம் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் ஆராட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஐப்பசி மாத ஆராட்டு திருவிழா கடந்த மாதம் 31ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 10-ம் நாளான இன்று ஆராட்டு விழா நடக்கிறது. ஆராட்டு ஊர்வலம் செல்வதற்கு வசதியாக மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விமான நிலைய ஓடு பாதை மூடப்படுகிறது. 1932ம் ஆண்டு திருவனந்தபுரம் விமான நிலையம் துவங்குவதற்கு முன்பே ஆராட்டு ஊர்வலம் விமான நிலை ஓடுபாதை உள்ள பகுதி வழியாகத்தான் சென்றுள்ளது. இந்த பாரம்பரியத்தை மாற்ற வேண்டாம் என்பதற்காகவே ஊர்வலம் நடைபெறும் நேரத்தில் விமான சேவை நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Night
Day