பழனியில் பஞ்சாமிர்தத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாகப் புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பஞ்சாமிர்தத்துக்கு தட்டுப்பாடு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடிகள், பால்குடம் எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். அவ்வாறு, சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அறநிலையத்துறை சார்பில் விநியோகிக்கப்படும் தேவஸ்தான பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்வது வழக்கமாக கொண்டுள்ள நிலையில், பல இடங்களில் தட்டுப்பாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், பக்தர்கள் அருகில் உள்ள தனியார் கடைகளில் பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது

Night
Day