பழமை வாய்ந்த செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அருகே மிக பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

தருமபுரத்தில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய 150வது ஆண்டுத் திருவிழா நடைபெறுவதை ஒட்டி, புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரத்திற்கு சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொடியேற்ற வைபவம் நடைபெற்றது. அப்போது, வாணவேடிக்கைகளும் நடத்தப்ட்டது. முன்னதாக பூஜை செய்யப்பட்ட செபஸ்தியார் உருவம் தாங்கிய கொடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. 9 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மூன்று பெரிய தேர் பவனி வரும் 12 ம் தேதியும், அதை தொடர்ந்து 13ம் தேதியன்று ஐந்து பெரிய தேர் பவனி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Night
Day