எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு வடிவுடையம்மன் சமேத தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தனது பிறந்த நட்சத்திர தினத்தையொட்டி, நேற்று குடும்பத்தினருடன் சென்னையை அடுத்த திருவொற்றியூரில் உள்ள 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு வடிவுடையம்மன் சமேத தியாகராஜ சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்தார். கோயில் நிர்வாகிகள் சார்பில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தியாகராஜ சுவாமியையும் வடிவுடையம்மனையும் புரட்சித்தாய் சின்னம்மா தரிசனம் செய்தார்.
முன்னதாக இக்கோயிலில் உள்ள விநாயகர், முருகன், அதிபுரீஸ்வரர் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்த புரட்சித்தாய் சின்னமாவுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிரசாதங்களை அர்ச்சகர்கள் வழங்கினர்.
அருள்மிகு வடிவுடையம்மன் சமேத தியாகராஜ சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள், புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, தனது பிறந்த நட்சத்திர தினத்தையொட்டி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார்.