எழுத்தின் அளவு: அ+ அ- அ
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கோயில் திருவிழாவையொட்டி, நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சி தாய் சின்னம்மா சார்பில் அவிழ்த்துவிடப்பட்ட காளை சீறிப்பாய்ந்து, மாடுபிடி வீரா்களை அலறவிட்டு வெற்றிபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்துள்ள குளத்தூர் செல்லாயி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பெரியகுளம் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. வீரர்களின் உறுதிமொழிக்கு பிறகு முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. போட்டியில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சார்பில் அவிழ்த்துவிடப்பட்ட காளை சீறிப்பாய்ந்து, மாடுபிடி வீரா்களை அலறவிட்டு வெற்றிபெற்றது.
புரட்சித்தாய் சின்னம்மா காளை பெயர் கூறிய உடனேயே மாடுபிடி வீரர்கள் மாட்டினை அடக்க பயம் கொண்டு பேரிகார்டின் மீது ஏறி நின்று ஒதுங்கி கொண்டனர். தொடர்ந்து தொகுப்பாளர் செங்குட்டுவன், சின்னம்மா பெயரை கூறியவுடன் தமிழ்நாடே பயம் கொண்டுள்ளதாக கூற, ஜல்லிக்கட்டு களமே அதிர்ந்தது.
விறுபிறுப்பாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாமடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியை, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள், ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.