மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள நிலையில், மதுரை நகரமே விழக்கோலம் பூண்டுள்ளது.

Roll Visual
உலகப்புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 15 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் மே 6 ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், மே 8 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், மே 9ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவர் திருக்கல்யாண வைபம் மே 8-ஆம் தேதி கோயிலின் வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

திருக்கல்யாணத்தை நேரில் தரிசிக்க உள்ள பக்தர்களுக்கான ஆன்லைன் கட்டண சீட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது. கோவில் இணையதளத்தில் இன்று முதல் மே 2 ஆம் தேதி வரை 200 மற்றும் 500 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day