மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாமக்கல், திருவாரூர், ராஜபாளையம் பகுதிகளில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு, மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் தங்கினார். இதையடுத்து இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ராஜ்நாத் சிங் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் பொற்றாமரை குளம் முன் புகைப்படம் எடுத்து கொண்டார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் மதுரை விமான நிலையம் சென்ற ராஜ்நாத் சிங் தனிவிமானம் மூலமாக அசாம் புறப்பட்டு சென்றார்.

Night
Day