மதுரை: முனியாண்டி கோயிலில் பிரியாணி திருவிழா கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அருகே நடைபெற்ற முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழாவில் 200 ஆடுகள், 300 கோழிகளை கொண்டு பிரியாணி தயாரிக்கப்பட்டது.  வடக்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள முனியாண்டிசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் தை மாதத்தில் பிரியாணி திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு நடைபெற்ற திருவிழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி விரதம் மேற்கொண்டடு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 200 ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் சுவாமிக்கு பலியிடப்பட்டு 2 ஆயிரத்து 500 கிலோ பிரியாணி அரிசியில் பிரியாணி தயார் செய்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

Night
Day