மயிலாடுதுறை: கோமல் கிருபா கூபேஸ்வரர் ஆலய திருக்‍குட நன்னீராட்டு விழா கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோமல் கிராமத்தில் அமைந்துள்ள கிருபா கூபேஸ்வரர் ஆலய திருக்‍குட நன்னீராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலச அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கூபேஸ்வரரை தரிசனம் செய்தனர்.

Night
Day