மூடநம்பிக்கையை விதைக்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் அரசு பள்ளி மாணவர்களிடையே மூட நம்பிக்கையை விதைக்கும் விதமாக யூடியூபர் மகா விஷ்ணு ஆற்றிய ஆன்மீக செற்பொழிவு, சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு பள்ளி கல்வித்துறை எப்படி அனுமதி அளித்தது என கேள்வி எழுப்பியுள்ள பலரும், அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர். 


பரம்பொருள் பவுண்டேசன் என்கிற பெயரில் யூடியூப் சேனல் வைத்து இருக்கும் மகா விஷ்ணு என்கிற நபர், ஆன்மீக செற்பொழிவுகள் மேற்கொள்பவர். இவரை சமீபத்தில் சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளி ஆகிய இரு பள்ளிகளிலும் சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து மோட்டிவேஷனல் ஸ்பீச் பேச வைத்து உள்ளனர்...

அப்போது, சைதாப்பேட்டை அரசு பள்ளியில் பேசிய அவர் கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. மேலும், முன்ஜென்ம தவறுகளால் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என பேசிய மகா விஷ்ணுவின் பேச்சை, மாற்றுத்திறனாளி ஆசிரியர் கண்டித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியரை மகா விஷ்ணு மரியாதை குறைவாக பேசினார். 

ஆன்மீக சொற்பொழிவிற்கு கண்டனம்

மேலும், இந்தியாவில் 3 லட்சத்திற்கும் மேல் குருகுலங்கள் இருந்தாகவும், அது பின்னால்  வந்த  ஆட்சியாளர்களால் அழிந்துவிட்டதாகவும் கூறினார். ஒரு மந்திரத்தை படித்தால் நெருப்பு மழை பொழியும், நோய் குணமாகும், மனிதர்கள் பறந்து செல்லாம் என மூட நம்பிக்கையை நரம்பு புடைக்கை மூச்சை பிடித்துகொண்டு செய்த ஆன்மீக செற்பொழிவு, சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில், இந்த சர்ச்சை பேச்சை கண்டித்து சென்னை அசோக் நகர் பெண்கள் பள்ளி முன் ஜனநாயக மாணவர் சங்கத்தினர் போராட்டதில் ஈடுபட்டனர். அப்போது, இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்த பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

அன்பில் மகேஷ் பதவி விலக  வேண்டும் 

சமீபகாலமாக தனியார் கல்லூரிகள் இன்ஸ்டாகிராம் பிரபலங்களை சிறப்பு விருந்தினராக அழைத்து வருவதும், அந்த பிரபலங்கலும் கல்லூரி மாணவிகளுடன் ரீல்ஸ் செய்வதும் என கல்வி நிலையங்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் காட்சிகள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது அரசு பள்ளிகளில் மகா விஷ்ணு போன்ற ஆன்மீக பேச்சாளர்கள் மூட நம்பிக்கையை பரப்பும் வேலையை தொடங்கி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக கோரி சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தின் மீது உடனே தீவிர நடவடிக்கை எடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு மன குழப்பத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற நிகழ்வுகளை பள்ளிகளில் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது...


Night
Day