ராஜராஜ சோழனின் 1039ஆம் ஆண்டு சதயவிழா 2 நாட்களுக்கு நடைபெறும் கவியரங்கம், பட்டிமன்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழனின் 1039-ம் ஆண்டு சதயவிழா இன்று துவங்கியது.

ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்த இராஜராஜ சோழன், ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் மன்னராக முடிசூடினார். அவருடைய 1039ம் ஆண்டு சதயவிழா மங்கள இசையுடன் இன்று துவங்கியது. அப்பர் பேரவை சார்பில் திருமுறை முற்றுதல், கருத்தரங்கம், இசை கச்சேரிகள் நடைபெற்ற நிலையில், மாலையில் பழங்கால இசைக் கருவிகளோடு ஆயிரத்து 39 நடன கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 2ம்  நாளான நாளை அரசு சார்பில் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

Night
Day