ராணிப்பேட்டை: ஸ்ரீசிவகாமி சுந்தரி உடனுறை ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் கோவிலில் திருகல்யாண வைபவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ சிவகாமி சுந்தரி உடனுறை ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருகல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட பல்வேறு சீர் வரிசையினை மங்கல வாத்தியம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து பெண்கள் அரசங்கால் நட்டனர். இதனை தொடர்ந்து பல்வேறு மந்திரங்கள் ஓத திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day