விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடலூர் மாவட்டம் ஆடூர் அகரம் கிராமத்தில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

குறிஞ்சிப்பாடி அருகே ஆடூர் ஆகரம் கிராமத்தில் வசித்து வரும் மண்பாண்டத் தொழிலாளர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காகித கூழ் மற்றும் மண்ணால் விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர். குறிப்பாக யானை வாகன விநாயகர், எலி வாகன விநாயகர், சிங்கம், மான், மாடு, மயில் வாகன விநாயகர், நந்தி வாகன விநாயகர், என பல்வேறு விதமான விநாயகர் சிலைகளை அரை அடி முதல் 10 அடி வரை செய்து வருகின்றனர். நூறு ரூபாயில் இருந்து அதிகபட்சமான விலை 25 ஆயிரம் ரூபாய் வரை உள்ள விநாயகர் சிலைகளை செய்து விற்பனைக்காக செய்து வைத்துள்ளனர்.
  

varient
Night
Day