விருதுநகர்: இருக்‍கன்குடி மாரியம்மன் கோயிலுக்‍கு வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வெள்ளி தேர் செய்வதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகிகள் 200 கிலோ வெள்ளி கட்டிகளை வழங்கினர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெள்ளி பொருட்களை உருக்‍கி, அதனை 200 கிலோ வெள்ளிக்‍ கட்டிகளாக கோயில் நிர்வாகத்தினர் மாற்றி வைத்துள்ளனர். இந்நிலையில், விருதுநகரில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்‍கு வெள்ளி தேர் செய்யும் பணிக்காக, அக்‍கோவில் அறங்காவலர் குழுத் தலைவரிடம், 200 கிலோ வெள்ளிக் கட்டிகளை திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து வெள்ளி கட்டிகளுக்‍கான தொகையான ஒரு கோடியே 57 லட்சம் ரூபாய், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சார்பாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. 

Night
Day