எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதம் மீட்கப்பட்டு, தற்போது களங்கமின்றி உள்ளதாக
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டால் பக்தர்கள் பெரும் மனவேதனை அடைந்துள்ளனர். இந்தநிலையில், திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஸ்ரீவாரி லட்டுவின் தெய்வீகத்தன்மையும் தூய்மையும் இப்போது கறைபடவில்லை என்றும் புனிதம் மீட்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் திருப்தி அடையும் வகையில் இது தொடர்வதற்கு தேவஸ்தானம் உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்பு கலப்பு குற்றச்சாட்டை தவிர்க்கும் வகையில் திருமலை தேவஸ்தானத்திற்கு நெய் கொண்டு செல்லும் டேங்கர்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் என கர்நாடக அரசின் நந்தினி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் திட்டமிடப்பட்ட வழித்தடத்தில் லாரி செல்வது உறுதிப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளது.