1,00,008 வடை மாலையுடன் காட்சியளிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கலில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலைகள் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மார்கழி மாதம் அமாவாசை திதி மூல நட்சத்திரம் கொண்ட நன்னாளில், ஆஞ்சநேயர் அவதரித்த நன்னாலே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 18 அடி உயரம் கொண்ட பிரமாண்ட ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளால் தொடுக்கப்பட்ட மாலைகள் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயர் விஸ்வரூபமாக காட்சியளித்தார். 

இதனை தொடர்ந்து நாமக்கல், கரூர், திருச்சி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Night
Day