எழுத்தின் அளவு: அ+ அ- அ
அபுதாபியிலிருந்து 30 நிமிடம் மற்றும் துபாயிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ள சுவாமி நாராயணன் கோயில், ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மிகப் பெரிய இந்து மத வழிபாட்டு தலமாகும். நிலநடுக்கம், மற்றும் அதீத வெப்பத்தினால் கோயில் பாதிக்கப்படாமல் இருக்க 100 சென்சார்கள் கோயிலுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கோயில் மொத்தம் 400 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் தொள்ளாயிரத்து நான்கு கோடியே 32 லட்சம் ரூபாய் இருக்கும்.
இந்தக் கோயில் இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலி மார்பிள் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் மொத்தம் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அபுதாபியில் 7 கோபுரங்களுடன் அமைந்துள்ள இந்துக் கோயிலில், 7 அமைப்புகளாக கடவுள்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சுவாமி நாராயண், கிருஷ்ணன்-ராதை , ராமன்-சீதை, சிவன்-பார்வதி ஆகிய சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதேபோல், ஜகன்னாத், வெங்கடேஸ்வரா சிலைகளையும் நிறுவியுள்ளனர். கேரளாவில் உள்ள பிரபலமான ஐய்யப்பன் சிலையையும், இந்த கோயிலில் நிறுவியுள்ளது பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.