18ஆம் படியில் "குரூப் போட்டோ" - "கூண்டோடு மாற்றம்"

எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 18ம் படியில்  நின்று குழு புகைப்படம் எடுத்த 23 போலீசார் ஆயுதப்படை முகாமிற்கு நன்னடத்தை பயிற்சிக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

உலக பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் புனிதமான பதினெட்டாம் படியேறி சாமி தரிசனம் செய்வது வழக்கம். படியேறும் பக்தர்கள் மீண்டும் இறங்குவதற்கு அனுமதி கிடையாது. அதற்கு வேறு வழிகள் உள்ளன. 

பந்தள மன்னர்களின் பிரதிநிதிகள், கோவில் மேல் சாந்தி, தந்திரிகள் மட்டுமே இருமுடி கட்டு இல்லாமல் படி ஏறவும் படியில் இறங்கவும் அனுமதி உள்ளது. அப்படி படியில் இறங்கும் போது சுவாமியை பார்த்தவாறுதான் இறங்குவார்கள் சாமி பக்கம் முதுகை காட்டி யாரும் நிற்க மாட்டார்கள். 

ஆனால் கடந்த 25ம் தேதி பாதுகாப்பு பணியில் இருந்த 23 போலீசார் நடை சாத்தப்பட்ட பின்பு பதினெட்டாம் படியில் நின்று குழு புகைப்படம் எடுத்தது சமூக வலைத்தளங்களில் பரவியதோடு பக்தர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதற்கு கேரளா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 23 போலீசாரும் ஆயுதப்படை முகாமில் நன்னடத்தை பயிற்சிக்கு அனுப்ப ஏடிஜிபி ஸ்ரீஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

Night
Day