எழுத்தின் அளவு: அ+ அ- அ
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் கழகத்தினர் ஒன்றிணைந்து, வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க வேண்டி, கழக தொண்டர் ஒருவர் உடல் முழுவதும் அலகு குத்தி பறவை காவடியில் கிரிவலம் வந்து பழநி முருகனை வழிபட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில், மாண்புமிகு அம்மா மற்றும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆகியோரின் தீவிர விசுவாசியான பொள்ளாச்சியைச் சேர்ந்த ஆர்.எஸ்.கிருஷ்ணன் என்பவர், பழநி திருஆவினன்குடி கோவிலில் சாமி தரிசனம் செய்தபின்னர், உடல் முழுவதும் அலகு குத்தி பறவை காவடி எடுத்தார்.
தொடர்ந்து பறவைகாவடியில் பழநி மலையை சுற்றி கிரிவலம் வந்த கழக தொண்டர் ஆர்.எஸ்.கிருஷ்ணன், பாதவிநாயகர் கோவிலில் வேண்டுதலை நிறைவு செய்தார்.
கழகத்தின் தீவிர தொண்டரான ஆர்.எஸ்.கிருஷ்ணன், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் கழகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பழநி முருகனை வேண்டி பறவை காவடி எடுத்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.