"அனைவரின் ஒத்துழைப்பே கும்பமேளாவிற்கு 16,000 ரயில்களை இயக்க உதவியது" மத்திய ரயில்வே அமைச்சர் பெருமிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அனைவரின் ஒத்துழைப்பும், நெருக்கமான ஒருங்கிணைப்புமே, மகா கும்பமேளாவிற்கு 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்களை இயக்க முடிந்ததாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 


மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னதாக பிரயாக்ராஜ் ரயில் நிலையத்திற்கு சென்று, அங்குள்ள ரயில்வே அதிகாரிகளை சந்தித்தார். தொடர்ந்து பேசிய அவர், இவ்வளவு பிரம்மாண்டமான நிகழ்ச்சியை நடத்தியதற்கு பிரதமர் மோடி மற்றும் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்தார். மேலும் மாநில காவல்துறை, பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே துறையினர் இடையே பலத்த ஒருங்கிணைப்பு இருந்ததாக தெரிவித்தார். இதனால்தான் மகா கும்பமேளாவிற்கு 13 ஆயிரம் ரயில்களை இயக்க திட்டமிட்டிருந்த நிலையில் 16 ஆயிரம் ரயில்களை இயக்கி, சுமார் 4 முதல் 5 கோடி ரூபாய் வரையிலான பக்தர்களை சங்கமத்திற்கு அழைத்து வர முடிந்ததாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Night
Day