"ஐரோப்பிய நாடுகளை மிஞ்சிய இந்திய மெட்ரோ கட்டமைப்பு"

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு ஐரோப்பாவில் உள்ள மெட்ரோ அமைப்பை விட இந்தியாவின் மெட்ரோ கட்டமைப்பு மிகச் சிறப்பாக இருப்பதாக ஜெர்மனியை சேர்ந்த சமூகவலைதள பிரபலம் அலெக்ஸ் வெல்டர் வீடியோ வெளியிட்டு பாராட்டியுள்ளார். 

அண்மையில் தலைநகர் டில்லிக்கு வருகை தந்த போது, அங்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அவர், அதன் அனுபவம் குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதில், மேற்கு ஐரோப்பா நாடுகளை விட இந்தியாவில் மெட்ரோ கட்டமைப்பு சிறப்பாக இருந்து வருவதாக அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு, இந்தியாவின் பொது போக்குவரத்தில் உடைந்த மற்றும் பழைய பேருந்துகள், இரைச்சலுடன் கூடிய ஆட்டோக்கள்தான் இருக்கும் என்று நினைத்திருந்ததாகவும், ஆனால், ஆக்ரா மற்றும் டில்லி உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பான மெட்ரோ கட்டமைப்புகள் இருப்பது எனக்கு தெரியாமல் போய்விட்டதாகவும் அலெக்ஸ் வெல்டர் கூறியுள்ளார். 

Night
Day