"காங்.எம்.பி". இருக்கையில் பணக்கட்டு - விசாரணைக்கு உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.யான அபிஷேக்‍ மனு சிங்வியின் இருக்‍கையின் கீழே இருந்து கட்டுக்‍கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்‍கு தேர்வானவர் காங்கிரஸ் மூத்த தலைவரான அபிஷேக்‍ மனு சிங்வி. நேற்று மாலை அவை முடிந்த பின்னர் அபிஷேக்‍ சிங்விக்‍கு ஒதுக்‍கப்பட்ட 222 வது எண் இருக்‍கையின் கீழே இருந்து கட்டுக்‍கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அவை தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்துள்ளார். இது குறித்து விசாரணைக்‍கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

Night
Day