"குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம்" - உச்சநீதிமன்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது அல்லது சேமிப்பது போக்சோ சட்டத்தின்கீழ் வரும் குற்றமாகும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை அம்பத்தூரை சேர்ந்த 28 வயது இளைஞர், செல்போனில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்த்து வந்ததற்காக, போக்சோவில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், தனிமையில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்ப்பது குற்றமாகாது என்று தெரிவித்து, அவரை விடுவித்தார். இதனை எதிர்த்து குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆனந்த் வெங்கடேசனின் கருத்தை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடுமையாக கண்டித்திருந்தார். 

மேலும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்ற நீதிபதி, குழந்தைகள் ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தால் அது போக்சோ சட்டத்தின் கீழ் வரும் குற்றமாகும் என தெரிவித்தார். குழந்தைகள் தொடர்பான இத்தகைய வழக்குகளில் குழந்தைகள் ஆபாசப்படம் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்றும், அதற்கு பதிலாக குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் என பயன்படுத்த வேண்டும் என்றும், இதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Night
Day