எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி அமைப்பின் புதிய தலைவராக நிதித்துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது செபி அமைப்பின் தலைவராக இருந்துவரும் மாதபி பூரி புச் பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகிறது. அவருக்குப் பதிலாக செபி அமைப்பின் புதிய தலைவராக தற்போதைய நிதிச் செயலாளர் துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதலை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் இந்த பதவியில் இருப்பார். இதற்கு முன் அவர் பொது நிறுவனங்கள் துறை, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை ஆகியவற்றில் செயலாளராகப் பணியாற்றினார். நிதிச் செயலாளராக இருந்த காலத்தில், இந்தியாவின் நிதி மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதில் துஹின் காந்தா பாண்டே முக்கிய பங்கு வகித்தார்.