எழுத்தின் அளவு: அ+ அ- அ
தென்னிந்தியாவில் இம்முறை பாஜகவின் ஓட்டு விகிதம் அதிகரிக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, பாஜக என்றால் உயர்சாதிக் கட்சி என்று ஒரு கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் உண்மை என்னவென்றால் பாஜகவில் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடியினரும், பிற்படுத்தப்பட்ட மக்களுமே பெரும்பாலும் இருப்பதாக கூறினார். மேலும் பாஜக பழமையான கட்சி என்பதால் இவ்வாறு சித்தரிக்கப்பட்டதாகவும், பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சியினர் பரப்பும் தவறான கருத்துகள் இவை எனவும் பிரதமர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 2019ல் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததாகவும், தற்போது தென்னிந்தியாவில் பாஜகவின் ஓட்டு விகிதம் அதிகரிக்கும் என தான் நம்புவதாகவும் கூறினார். மேலும் தெற்கில் உள்ள திமுக கட்சியின் அடையாளம் என்ன என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, அக்கட்சியின் நிலை குறித்து மக்கள் தற்போது காண்பதாக கூறினார்.