"பெண்களை பாதுகாக்க மேற்கு வங்க அரசு தவறிவிட்டது" - ஆளுநர் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெண்களை பாதுகாக்‍க மேற்கு வங்க அரசு தவறிவிட்டதாகவும், பெண்களுக்‍கு இங்கு பாதுகாப்பு இல்லை என்றும் அம்மாநில ஆளுநர் ஆனந்த போஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களை மிகவும் ​மதித்து போற்றிய மேற்கு வங்கத்தின் முந்தைய பாரம்பரிய பெருமையை மீட்டெடுக்‍க வேண்டும் என கேட்டுக்‍கொண்டார். சமுதாயத்தில் பெண்களுக்‍கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஆளும் அரசு உருவாக்‍கியுள்ள குண்டர்களால் பெண்கள் மிகவும் அச்சத்தில் இருப்பதாகவும் ஆளுநர் குற்றம்சாட்டினார். ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்து பயிற்சி பெண் மருத்துவரை படுகொலை செய்தவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் இது குறித்து பாதிக்‍கப்பட்ட தாயின் கருத்தை தாம் மதிப்பதாகவும் மேற்கு வங்க ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Night
Day