"மாநகராட்சி உறுப்பினர்களை நியமிக்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு" - உச்சநீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி மாநகராட்சிக்கு நியமன உறுப்பினர்களை நியமிப்பதில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு டெல்லி மாநகராட்சியில் ஆளும் அரசின் அமைச்சரவையின் ஆலோசனையின்றி 10 நியமன உறுப்பினர்களை நியமிக்கும் உரிமைகள் குறித்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில், அமைச்சரவை ஆலோசனையின்றி மாநகராட்சி உறுப்பினர்களை நியமனம் செய்ய துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியின் உள்கட்டமைப்பு தொடர்பாக ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆம் ஆத்மி அரசுக்கு பின்னடைவாக உள்ளது.

Night
Day