"மோடியின் குடும்பம்" என்ற வார்த்தையை நீக்கி விடலாம்” - பிரதமர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் முடிந்து விட்ட நிலையில் சமூக வலைதளங்களில் மக்கள் தங்களுடைய பெயர்களுக்கு பின்னால் மோடியின் குடும்பம் என்று குறிப்பிட்டிருந்ததை நீக்கி விடலாம் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தேர்தல் பிரச்சாரத்தின்போது, மக்கள் பலரும், தங்கள் சமூக வலைதள பக்கங்களில், அன்பின் அடையாளமாக, மோடியின் குடும்பம் என்று சேர்ந்திருந்தது தமக்கு அதிக பலத்தை கொடுத்ததாக கூறியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தொடர்ந்து 3வது முறையாக வாய்ப்பளித்திருப்பதன் மூலம், நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டதற்காக மீண்டும் நன்றி தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, மக்கள் தங்களுடைய சமூக ஊடக பக்கங்களில் இருந்து மோடியின் குடும்பம் என்பதை நீக்கி விடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

Night
Day