"ராமர் கோயிலை தொடர்ந்து கிருஷ்ணரும் பிடிவாதம்" - மதுரா மசூதி விவகாரம் தொடர்பாக உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கருத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டப்பட்டதை அடுத்து, தற்போது கிருஷ்ணரும் பிடிவாதம் பிடிப்பதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சட்டப்பேரவையில் பேசிய அவர், கிருஷ்ணர் 5 கிராமங்களைக் கேட்டது போல் தற்போது இந்து சமுதாயம் அயோத்தி, காசி, மதுரா எனும் மூன்று இடங்களைக் கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அயோத்தி கோவில் திறப்பைப் பார்த்த காசியில் உள்ள நந்தி பகவான் அடம்பிடிக்கத் தொடங்கியதால் ஞானவாபி மசூதியிலும் வழிபாடு தொடங்கி விட்டதாகக் கூறிய அவர் தற்போது மதுராவில் உள்ள கிருஷ்ணரும் அடம்பிடிக்கிறார் என தெரிவித்துள்ளார். மதுராவில் உள்ள ஷாஹி இட்கா மசூதி, கிருஷ்ணர் கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

Night
Day