''அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைப்போரை எதிர்க்க வேண்டும்'' - மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றத் துடிப்பவர்களை வரும் மக்களவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவில் 'அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு மாநாடு -2024' என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய அவர், தற்போதுள்ள சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பை அகற்றிவிட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் சதி வேலைகள் நடப்பதாக குற்றம் சாட்டினார். அத்தகைய சதியில் ஈடுபடுவோரை அனைவரும் ஒரே அணியில் ஒருங்கிணைந்து நின்று எதிர்க்க வேண்டும் என்றார். அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் இந்த நாட்டில் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுவது உறுதி என்றும் கார்கே எச்சரித்தார்.

Night
Day