''தூர்தர்ஷன் லோகோ காவி நிறம் அல்ல'' - பிரசார் பாரதி CEO விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூர்தர்ஷன் லோகாவின் நிறம் காவி அல்ல என்றும் அது ஆரஞ்சு நிறம் என்றும் பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அலுவலர் கவுரவ் திவேதி விளக்கம் அளித்துள்ளார். 

மத்திய அரசு செய்தி நிறுவனமான தூர்தர்ஷனின் லோகா நீல நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அலுவலர் கவுரவ் திவேதி, லோகோ நிறத்தை பாஜகவுடன் தொடர்புபடுத்தி பேசுவது தவறானது என்றும் அது ஆரஞ்சு நிறம் என்றார். காட்சி அழகியலுக்காக பிரகாசமான மற்றும் ஈர்க்கும் நிறத்தை தேர்வு செய்ததாகவும், தூர்தர்ஷனின் உள்கட்டமைப்பு முழுமையும் இதுபோல் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Night
Day