'சாலைகளில் தொழுகை நடத்துவோரின் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ரத்து' - உத்தரபிரதேச காவல்துறையின்அதிரடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று மற்றும் ரம்ஜான் அன்று சாலைகளில் தொழுகை நடத்தினால் கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உத்தரபிரதேச போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மீறுபவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. உள்ளூர் மசூதிகள் அல்லது தேர்வு செய்யப்பட்ட ஈத்காக்களில் மட்டுமே தொழுகை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகளைப் பரப்புபவர்கள் அல்லது அமைதியின்மையைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் உறுதியாக தடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

Night
Day