'சிவசக்தி' பெயருக்கு சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகாரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய நிலவின் தென் பகுதிக்கு பிரதமர் மோடி சூட்டிய சிவசக்தி என்ற பெயரை சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகரித்துள்ளது. நிலவை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை திட்டமிட்ட இடத்தை சென்றடைந்தது. சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரன் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கி சாதனை புரிந்தது. நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு சிவசக்தி என்று பிரதமர் மோடி பெயர் சூட்டினார். இந்த நிலையில், சிவசக்தி பெயருக்கு அங்கீகாரம் அளித்துள்ள சர்வதேச வானியல் ஒன்றியம், இது குறித்த தகவலை கோள்களின் பெயரிடல் புத்தகத்தில் வெளியிட்டுள்ளது.

Night
Day