'சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாகிறார் கே.ஆர்.ஸ்ரீராம்'

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த கங்கபூர்வாலா கடந்த மே 23-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இந்தநிலையில், பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதேபோல், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள கல்பாத்தி ராஜேந்திர ஸ்ரீராமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

Night
Day